Skip to content

சாலை தாபிமானம்

சாலையில் செல்லும் மனிதன் குறுக்கே வந்த நாய்க்கு வழிகொடுத்து மனிதர்க்கு வழிகொடுக்க மறுக்கிறான்!!! தன் நாய்தாபி மானத்தை காப்பாற்றிக்கொண்டு மனிதாபிமானத்தை தவறவிட்டான்..! கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது ஒவ்வொரு சாலை சைகை விளக்கு முற்றத்திலும்..! என் பாரதிக்கு அன்றே புலப்பட்டது! முந்தி செல்பவனை முந்தநினைக்கும் மனிதன் பிந்தி வருபவனை… 

காதல் பரிசு

காதலியுடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்று ஒருதலை காதலில் மட்டும் அல்ல !!!!! முதல் சந்திப்பில் மனம்நெகிழ்ந்து தோழமையின் பின்சென்று, அவன் மனதை அவளும் அவள் மனதை அவனும், நன்கு புரிந்து கொண்டு பின் ஒரு நாள் தன்னை அறியாமல், கண்களில் வெட்கமும் இதலில் புன்னகையும் மனதில்… 

கொஞ்சல் !

கொஞ்சல் என் முதல் எதிரி , உன் கோபம்!… என் நெருங்கிய நண்பன், உன் கொஞ்சல்!… எதிரி வரும்போதெல்லாம், சண்டை வரும்!.. சண்டையை சமாதானம் செய்ய, என் நண்பன் வருவான்!… எதிரி நான் காத்திருகிறேன் நண்பன் உனக்கு …!

இரு வரி கவிதை

இரு வரி கவிதைகள் நம் காதல்…..! என்னில் தொடங்கி உன்னில் முடிவதால்…..! உனக்கு தொடக்கமாக நானும் எனக்கு முடிவாக நீயும்…..! – வினோத்

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல் இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது உன்னால்..! காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..! புன்னகை மறந்த இதழ்களை புன்னகைக்க செய்கிறாய்..! வளம் இழந்த வாழ்வை வளம்பெற செய்கிறாய்..! கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..! நீ அறியாமல் செய்யும்… 

ஒருத்தியின் செல்ல மகள்

அலுவலகத்திலிருந்து வேகமாய் வீடுதிரும்ப நினைத்த என்னை…! ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது எனக்கு முன்சென்ற மழலையின் சிரிப்பு…! தெரிந்த பலர் சொல்லாமல் விலகும் நேரத்தில், தெரியாத இந்த மழலை கையசைத்து டாட்டா என்றதும் மனமுருகிப்போனது…! மங்கையர் பலரிடம் கிடைக்காத காதலை, சட்டென்று கொடுத்துவிட்டால் முகம்தெரியாத மங்கை ஒருத்தியின் செல்ல மகள்..!… 

உன்னை மறவாதே..!

பகையோடு இருந்தாலும், பண்பை மறவாதே..! கனவோடு காத்திருந்தாலும், காதலை மறவாதே..! உறவே வெறுத்தாலும், உரிமை மறவாதே..! உரிமை மறுத்தாலும், உண்மை மறவாதே..! எது வென்றாலும், நீ தோற்றாலும், உன்னை மறவாதே..! அன்புடன், பாமரன் பா.பரத்

தியாகம்..!

உருவமில்லா காதல் உருகித்தவிக்கிறது….! தீக்குச்சியின் தியாகம் புரியாத மெழுகுவர்த்தியை நினைத்து….! – வினோத்

காதல் மலர் ..!

என்னவளே நமக்காக இதழ் பிரித்த காதல் மலர் இன்று இதழ் உதிர்த்து மண் சேர்ந்தது…..! முடியாதென தெரிந்தும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன் உதிர்ந்த இதழை உரிய மலரிடம் சேர்க்க…..! – வினோத்

நினைவு…!

நினைவு…! ஒவ்வொரு நிமிடமும் உன்னை மறக்க நினைகிறேன்…! மறந்தும் விடுகிறேன்…! மறக்க நினைக்கும் நினைவை…!