Skip to content

காதல் செய்தேன்.

காதல் செய்தேன். கற்புள்ள கன்னியரை மட்டும் அல்ல… மெரினா கடற்கரையில் நடப்பது போல் சாலையில் என்னை கடந்து செல்லும் கிழவியை – காதல் செய்தேன். வேகமாய் என்னை கடந்து  சட்டென்று  வாகனத்தை நிறுத்தி நாய்குட்டிக்கு வழிவிட்ட நண்பரை -காதல் செய்தேன். என் முகம் அறியாமல் புன்னகை செய்யும் மழலையின்… 

என்னவள் நீ…

எண்ணிலடங்கா எண்ணங்கள் பல என்னுள் இருக்கையில்… என்னைமறந்த நிலையிலும் என்னவள் நீ… நினைவுகளாக !! பா.பரத்

ஆடம்பரக்கொலை….

காலையில் என் துயில்  கலைக்கும் குருவி. இன்று கவலையுடன்  தத்தளிக்கிறது தெருவில் தன் தாயுடன்..! குருவிக்கோ கூடில்லை எனக்கோ உறவில்லை..! பசித்தபோதெல்லாம் எனக்குணவளித்த என்கிழவியை இன்று  காலையிலிருந்து காணவில்லை..! தொண்டை வரண்டபோதெல்லாம் இளநீர் வெட்டிக்கொடுக்கும் நரை கிழவனும் இன்றில்லை..! அமைதியின்றி அமைதியான  சாலையில் தனியே  செல்லும்போது என்னை கட்டித்தழுவிய… 

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய்  தங்கியதுமே, கல்லறையில் பிணமாய்  தூங்குவதும், கட்டாயமான ஒன்று! பிறப்பது யாராயினும் பிரிவது உறுதி. உலகைவிட்டு ! பிறகு ஏன் இந்த பிரிவினை ? உருக்கமாயிருந்த  உடையவரும், உற்சாகமாயிருந்த  உறவினரும், ஒரு நொடி  சிந்தித்தே  சிரித்தனர்… பிறந்தது பெண் குழந்தையென்றதால்… தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையை… வயிற்றுக்கு… 

என் ஒற்றை பல் கிழவி !

சதை தொங்கிய, தள்ளாடும் வயதில், தனியே நடந்து செல்லும், என் கிழவி ! பல்லில்லா பொக்கைகளுக்கு, மத்தியில் ஒற்றை பல்லுடன், என் கம்பீரக் கிழவி ! காலத்தை கடந்து, கைத்துணையாய் நிற்கும், கைத்தடியை மட்டும் நம்பி, என் கிழவி ! அதே கிழவி, சாலையைக்கடக்க வேண்டுமென்று ஒரு அசாதாரண… 

ஆடை-நிர்வாணம்

பழமை மறந்து, பண்பாடு மறைத்து, அரைகுறை ஆடையணிந்து, ஆடை-நிர்வாணமாக, வீதியில் செல்லும், சில பெண்களுக்கு ! நீங்கள் சுதந்திரம் கேட்பது ஆண்களிடமிருந்தா ? ஆடையிடமிருந்தா ? ஆண்களிடமிருந்து என்றால் ஆடையை கூட்டச் சொல் ! ஆடையிடமிருந்து என்றால் தூக்கில் தொங்கச் சொல் ! ஆடைகளைந்து பெண்ணுடலை பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே… 

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்

என்னை காத்த உடல் ,நீ நோவது காணமுடியாமல் நான் கரையும் தருணம் உன்னை பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்… என்னுடலே பிரிந்தேன் நான் உந்தன் உயிரே….. பிரியம் வைத்தேன் பிரியாதிருப்பேன் என்றேன் எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான், எமன்  அழைத்ததால் செல்கிறேன்.. மகளே!! நீ பிறக்கும் முன்னே உன்னை பார்த்தவள்  நான் ! பிறந்த… 

முயற்சிசெய்

முடியவில்லையென்றால், முற்றுப்புள்ளியிட்டு, முடித்துவிடாதே, முயற்சிசெய். முடியும்வரையல்ல, முடிவு தெரியும் வரை முடியும் உன்னால்…

ஆடு என்கின்ற இறைச்சி !

கறியாகப்போகும் ஆட்டிற்கு வழிவிடும் மனிதா ! கனவோடு சாலையில், உன்னை கடந்து செல்லும், சக மனிதருக்கும் வழிகொடு..! ஆட்டின் உயிரை விட, மனிதனின் கனவு உயர்ந்தது ! ஆட்டு இறைச்சியை காட்டிலும், ருசியானது என் மானுடரின் கனவு ..! – பாமரன்.பா.பரத்