Skip to content

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக
புழங்காமல் கிடந்த காதல்
இன்று
புழக்கத்திற்க்கு வந்துள்ளது
உன்னால்..!

காதலின்றி
பூட்டிக்கிடந்த மனதை
,
பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறாய்..!

புன்னகை மறந்த
இதழ்களை
புன்னகைக்க
செய்கிறாய்..!

வளம் இழந்த
வாழ்வை
வளம்பெற
செய்கிறாய்..!


கண்ணீர்
துளிகளால் நனைந்திருந்த
கன்னங்களை
எச்சில் கொண்டு துடைக்கிறாய்..!


நீ அறியாமல்
செய்யும் சிறு அசைவும்
என்னை
அறியச்செய்கிறாய்..!


வாழ்வில்
அர்தங்கள் இழந்த வேலையில்
,
வாழ்க்கைக்கே
அர்த்தமாகிறாய்..!


முடியுமா என்ற
கேள்விகளுக்கு
,
முடியும் என்றே
முத்தத்தில் பதிலளிக்கிறாய்..!


நினைவுக்கெட்டிய
நினைவுகள்யாவும்
நினைவில் இல்லை
உன்னால்..!


ஆயிரம்
காதல்களில்
தோல்வி
கண்டவனும்
கரைந்திடுவான்..!

புரியாமல்
பேசும்
உன் மழலை மொழி
முன்…!


நானும்
கரைந்தேன்..! கரைகிறேன்..!


மொத்தத்தில்
ஒற்றை
முத்தத்தில்
வாழ்வின் ருசியை
அறியவைத் -தாய்
நீயே…!

என் மகளே..!
– ஆதிரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *