Skip to content

நினைவுகள் !

கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிலையை சிற்பி எழுப்புவது போல்..! என் நெஞ்சுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் நம் காதலை எழுப்புகிறது உன் நினைவுகள்..!

காதல் பரிசு

காதலியுடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்று ஒருதலை காதலில் மட்டும் அல்ல !!!!! முதல் சந்திப்பில் மனம்நெகிழ்ந்து தோழமையின் பின்சென்று, அவன் மனதை அவளும் அவள் மனதை அவனும், நன்கு புரிந்து கொண்டு பின் ஒரு நாள் தன்னை அறியாமல், கண்களில் வெட்கமும் இதலில் புன்னகையும் மனதில்… 

இரு வரி கவிதை

இரு வரி கவிதைகள் நம் காதல்…..! என்னில் தொடங்கி உன்னில் முடிவதால்…..! உனக்கு தொடக்கமாக நானும் எனக்கு முடிவாக நீயும்…..! – வினோத்

தங்க மீன்கள்…!

உன்வருகைக்காக நாட்கள் பல காத்திருந்தேன் நான் ..! செல்வனாக நீ பிறந்தால் உன் முதல் நண்பன் நான்…! செல்வியாக நீ பிறந்தால் உன் முதல் அன்பாளன் நான்…! என்னவளின் தாய்மைக்கும், என்னின் ஆண்மைக்கும், அடையாளம் தந்தது நீ…! நேற்றுவரை நமக்கிடையில், யாரும் வரமுடியாதென்ற…! உன் தாயின் கர்வமிக்க பேச்சை,… 

தேடிய காதல் இங்கே….!

என்னவனே ….!!! என்னுள் நீ மட்டும் ஆட்சி செய்துவரும் நேரத்தில் இன்னும் ஒரு நபர் தயாராக உள்ளார்…! அடி அழகி…! என்று கட்டிப்பிடித்தபடி, புலம்புகிறான்…! என்னை தோல்வி சாய்த்தபோதெல்லாம் உன் தோளில் சாய்த்துக்கொண்டாய்…! என் கண்கள் அழுதபோது உன் விரல்களால் துடைத்துவிட்டாய்…! என் இதழ் புன்னைகைக்கும் போது, உன்… 

இசையின் காதலன்

உன்னை கையிலெடுத்து கட்டியணைத்து….! இதழோடு இதழ்சேர்த்து…! என் மூச்சு காற்றை உனக்களிகும்போது தான் இசை பிறக்கும்….! புல்லாங்குழல்….!

மாமா ஐ லவ் யு டா !!

அன்று என் தாய் அடுக்களையில் இருக்க…! என்னை கட்டியணைத்து என் காதில்பயத்துடன் என்னவள் முணுமுணுத்தது….! இன்றுவரை என் இதயத்தைவிட்டு இறக்கவில்லை…! “மாமா ஐ லவ் யு டா”

திருமண வியாபாரம்

கௌரவமென்னும் இலாபத்திற்காக…! அவள் தந்தை செய்யப்போகும் திருமண வியாபாரத்திற்கு…! தன் மானம் விற்று நான் கொடுத்த முதலீடு மனம்..! வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்….!

காத்து நிற்கிறேன்

உனக்காக காத்திருந்த நாட்களைவிட….! உன்னை காத்து நின்ற நாட்கள் தான் அதிகம்…! அன்று வருவாய் என்று காத்திருந்தேன்…! இன்றோ வரப்போவதில்லை என்பதால் காத்து நிற்கிறேன்…! கரணம்…! காதலுக்கு காத்திருக்கத்தான் தெரியும்…! காயப்படுத்த அல்ல…???