Skip to content

மீண் டும் டும் டும்

இரட்டை கிளவியாய், இருந்த வாழ்விற்கு.. காதல் என்றொரு, பெயர் சூட்டி, காரனப் பெயர் தந்தால்…! பின் காதல் மழையில், நனைந்தேன் இடைவிடாது..! என்றோ நான் கண்டகணவு.. நிகழ்கால நிஜங்களாக கண்முன்னே…! பழையன கழிந்து, புதியன புகுந்து… மீண் டும் டும் டும் ஒரு காதல் கதை…! காதலுடன் பா.பரத்

காதல்..!

மூன்றெழுத்து வார்த்தையில் இருவரின் வாழ்க்கை…! காதல்..! இருவர் மட்டும் வாழுமுலகம் காதல்…! ஒருவர் மட்டும் நோகும் உலகம் காதல்…! தலைவனும், தலைவியும் சேர்ந்தார்கலென்பது அல்ல காதல் ! பிரிவிலும், பிரியாதிருந்தார்கள் என்பதே காதல்..! பிரியமுடன் பாமரன் பா.பரத்

எண்ணிலடங்கா நினைவுகள்…!

உன்னிழலை நேசித்தாலே என்மீது கோபம் கொள்பவள் நீ, உன்னிழலை நேசிக்கவே தயங்கும்போது… நீ அல்லாத வேறொரு பெண்ணை, எப்படி நேசிப்பேன் நான் !!! நீருக்குள்ளே காற்று ஒழிந்திருப்பது போல என்றுமே எனக்குள் என்னவள் நீ..! ஆண்டுகள் பல ஆயினும் என்னை ஆண்டு கொண்டிருக்கிறது உன் நினைவுகள்..! நீ இல்லாது… 

போலியான நான் நிஜமாய்…!

நிற்க கூட நேரமில்லாமல் நகர்கிறது நாட்கள்…. ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் என்னவள் உன் நினைவுகளுடன்…! நீ என்பது நிழலாய், நான் என்பது நிஜமாய், நாம் என்பது நிவைவுகளாய், என்றும் என்னிதயத்தில்….! போலியான நான் நிஜமாய் வாழ்கிறேன்..! பொய்யான நீ நினைவாய் வாழ்கிறாய்…! உயிரான நம் காதல்,… 

வாயாடி

வருடங்கள் பல கடந்தும் வந்து வந்து செல்கிறது வாயாடி அவளின் வண்ண நினைவுகள்….! நிற்க இடமில்லாமல்… பாமரன் பா.பரத்

காதலின் பிறந்தநாள்..!

காதலின் பிறந்தநாள்..! இதழோடு இதழ்சேர்ந்தது…முத்தம் பிறந்தது..! இதழோடு இதழ்பிரிந்தது…புன்னகை பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்சேந்தது..தேடல் பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்பிரிந்தது…ஊடல் பிறந்தது..! இவ்வரிசையில்… உடலோடு உடல்சேர்ந்தது…காமம் பிறந்தது..! அணுவோடு அணுசேர்ந்தது..கரு பிறந்தது..! அந்தஉடலை விட்டு கருபிரிந்தது…மனிதன் பிறந்தான்….! அப்படியானால்எப்போதுபிறந்துதுகாதல் ???? தாயின் வயிற்றில்கன்னம் வைத்ததந்தைக்கு…! காலசைத்து நாம் தந்தமுதல் முத்தத்தில்மனிதனுக்குள்காதல் பிறந்தது..!… 

காதல் செய்தேன்.

காதல் செய்தேன். கற்புள்ள கன்னியரை மட்டும் அல்ல… மெரினா கடற்கரையில் நடப்பது போல் சாலையில் என்னை கடந்து செல்லும் கிழவியை – காதல் செய்தேன். வேகமாய் என்னை கடந்து  சட்டென்று  வாகனத்தை நிறுத்தி நாய்குட்டிக்கு வழிவிட்ட நண்பரை -காதல் செய்தேன். என் முகம் அறியாமல் புன்னகை செய்யும் மழலையின்… 

நான் கிறுக்கிய காதல் ஓவியம்

முத்தமிட்ட மழலையின், எச்சில் ஈரம்  கன்னத்தில் ஒட்டிக்கொண்டது போல்….! உன்னிடமிருந்து விலகியும், நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, காதல்….! நான் இல்லாத நீயும் !!! நீ இல்லாத நானும் !!! நாம் இல்லாத காதலும்!!! மழலையின் ஓவியம் போல் ! சிலருக்கு கிறுக்கலாகவும், சிலருக்கு ஓவியமாகவும், காட்சியளிக்கும்….! நான் கிறுக்கிய என்… 

ஓர் நாள் இரவு…

நிலவிற்காக தன் சிறகை விரித்தது வானம்…..! சிறகின் நிழலில் தங்களையும் இணைத்தன நட்சத்திரங்கள்….. குளிர் தென்றல் பட்டதும் வெட்கத்தில் மலர்ந்தன பூக்கள்…..! தன் துணை தேடி அகவியது மயில்…..! அனைத்தையும் மறக்கச்செய்தது என் கன்னத்தில் உன் இதழ் பதித்த முத்தம்……!  – வினோத்

காதலின் முதல்கட்ட நடவடிக்கை..!

காதல்..! நீ அவளை வென்றாய் என்பதைவிடவும்…! அவள்உன்னைவென்றால் என்பதைவிடவும்…! ஒருபெரிய வெற்றி உள்ளது..! நீஅவளிடம்தோற்பது உன் வெற்றி…! அவள்உன்னிடம் தோர்ப்பது அவள் வெற்றி..! இருவரும் காதலிடம் தோற்பது காதலுக்கு வெற்றி…! காதல்விசித்திரமான நோய்..! காதலில் கண்கள் பேசும்..! நடந்தால் தூரம் தெரியாது..! சண்டைபோட்டால் கோபம் வராது மாறாக அழுகை…