Skip to content

போலியான நான் நிஜமாய்…!

நிற்க கூட நேரமில்லாமல் நகர்கிறது நாட்கள்…. ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் என்னவள் உன் நினைவுகளுடன்…! நீ என்பது நிழலாய், நான் என்பது நிஜமாய், நாம் என்பது நிவைவுகளாய், என்றும் என்னிதயத்தில்….! போலியான நான் நிஜமாய் வாழ்கிறேன்..! பொய்யான நீ நினைவாய் வாழ்கிறாய்…! உயிரான நம் காதல்,… 

என்னவள் நீ…

எண்ணிலடங்கா எண்ணங்கள் பல என்னுள் இருக்கையில்… என்னைமறந்த நிலையிலும் என்னவள் நீ… நினைவுகளாக !! பா.பரத்

எல்லாமே உன் நினைவு

இரவெல்லாம் கண் விழித்து உன் நினைவில் வாழ்கிறேன்….. நான் உறங்கிய பின் இதமாய் என் தலை கோதுகிறாய் நிலவாய்……  – வினோத்

ஏதோ ஒரு நினைவு

நான் காணும் இடம் யாவும் நிரம்பி நிற்கின்றது உந்தன் நினைவுகள்…… எளிதில் உன்னை மறக்க சொல்கிறது இவ்வுலகம்…. எந்தன் உலகை சுழற்றுவதே உந்தன் நினைவுகள் என்பதையறியாமல்…… – வினோத்

காதல் பரிசு

காதலியுடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்று ஒருதலை காதலில் மட்டும் அல்ல !!!!! முதல் சந்திப்பில் மனம்நெகிழ்ந்து தோழமையின் பின்சென்று, அவன் மனதை அவளும் அவள் மனதை அவனும், நன்கு புரிந்து கொண்டு பின் ஒரு நாள் தன்னை அறியாமல், கண்களில் வெட்கமும் இதலில் புன்னகையும் மனதில்… 

கொஞ்சல் !

கொஞ்சல் என் முதல் எதிரி , உன் கோபம்!… என் நெருங்கிய நண்பன், உன் கொஞ்சல்!… எதிரி வரும்போதெல்லாம், சண்டை வரும்!.. சண்டையை சமாதானம் செய்ய, என் நண்பன் வருவான்!… எதிரி நான் காத்திருகிறேன் நண்பன் உனக்கு …!

இரு வரி கவிதை

இரு வரி கவிதைகள் நம் காதல்…..! என்னில் தொடங்கி உன்னில் முடிவதால்…..! உனக்கு தொடக்கமாக நானும் எனக்கு முடிவாக நீயும்…..! – வினோத்

தியாகம்..!

உருவமில்லா காதல் உருகித்தவிக்கிறது….! தீக்குச்சியின் தியாகம் புரியாத மெழுகுவர்த்தியை நினைத்து….! – வினோத்

காதல் மலர் ..!

என்னவளே நமக்காக இதழ் பிரித்த காதல் மலர் இன்று இதழ் உதிர்த்து மண் சேர்ந்தது…..! முடியாதென தெரிந்தும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன் உதிர்ந்த இதழை உரிய மலரிடம் சேர்க்க…..! – வினோத்

நினைவு…!

நினைவு…! ஒவ்வொரு நிமிடமும் உன்னை மறக்க நினைகிறேன்…! மறந்தும் விடுகிறேன்…! மறக்க நினைக்கும் நினைவை…!