Skip to content

தாயாக மாற ஆசை….!

அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் நினைவே…! அதிகாலை எழுந்ததும் அரை தூக்கத்தில் அசையும் உன்னை அணைத்த பிறகே அடுத்த வேலை எனக்கு…! உன் முகம் சிரிக்கக்கண்டால்..! என் மனம் சில்லென்றாகும்…! சிணுங்குமுனை சிரிக்கவைக்க சிறுபிள்ளையாய் சில மணிநேரம் சிதறியது…! நேரமொதுக்கிய விளையாட்டை நேரம்மறந்து விளையாடியதால்..! நேரத்திற்கு வெளியே செல்லாமல் நேரந்தவறி… 

திருமண வியாபாரம்

கௌரவமென்னும் இலாபத்திற்காக…! அவள் தந்தை செய்யப்போகும் திருமண வியாபாரத்திற்கு…! தன் மானம் விற்று நான் கொடுத்த முதலீடு மனம்..! வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்….!

என் காதலின் முத்தம்

என் காதலின் முத்தம் தனிமையில் தயங்கி தயங்கி இதழோடு இதழ்சேர்த்த முத்தம்…! காமத்தில் முடிந்தது…! ஆசையாய் கன்னத்தில் கொடுத்த முத்தம்…! மாலை துணிக்கடையில் பயணித்து…! இரவு…! Dai I Love You என்று முடிந்தது…! சுவாரசியமாக சண்டைபோடுகையில் ஆத்திரத்தில் “உங்க அப்பா வீட்டுக்கே போடி” என்ற சொன்ன வார்த்தையை… 

நானாக நான் இல்லை !

பொய் கனவு நிஜமாய் நான் கண்ட காதல் கனவு நினைவாய் போனது…! என் வாழ்வில் மெய் பொய்யானது பொய் மெய்யானது காதல் நினைவானது நினைவு வலியானது வலி வார்த்தையானது வாழ்க்கையோ மௌனமானது…! மொத்தத்தில் நான் நானாக இல்லை…!

நான் செய்த சாதனை…!

நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்… 

நேசம் அழிவதில்லை

நீ இருக்கும் வரை உன்னை நேசித்தேன்…! நான் இறக்கும் வரை உன்னை சுவாசிப்பேன்…! காகிதத்திலும் சரி..! கவிதையிலும் சரி..! அடங்காது என் காதல்…! உன்னை நினைத்து சுவாசிக்க மறந்த பொழுதும் சரி…! என் சுவாசம் நிற்கும் அப்பொழுதும் சரி….! என் நேசம் மட்டும் அழியாது கண்ணே…!

மௌனம்..!

வாயடைத்து வார்த்தையின்றிப் போவது மௌனம் அல்ல..! தனக்குள் பேசிக்கொள்வதும் பிறரை பேசாமல் கொல்வதும் தான் மௌனம்…!