Skip to content

நண்பா கவனம்

மது மாது இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரிகள்….! பயணத்தின் பொது இருவரையும் தீண்டாதே பின் வீடுதிரும்புவது சிரமம்…! எனவே நண்பா கவனம்…! சாலை விதிகளை மதிப்பவர்களை விட, மீறுபவர்கள் தான் அதிகம்…. எனவே நண்பா கவனம்…! வேகமாய் முந்துபவனிடம் , நியூட்டனின் மூன்றாம் விதியை பயன்படுத்தாதே… பின்… 

என் வாழ்வில் பெண்கள் பல

காதலியர் என்று என்னல் வேண்டாம்..! எனக்காக காத்து நின்றவர்கள் என்றே பொருள்படும்..! என் தாயிர்கே என்னை அறிமுகம் செய்த செவிலியர்..! என் தந்தைக்கு என்னை அறிமுகம் செய்த தாய்..! நானே எனக்கு அறிமுகம் செய்துகொண்ட என் தங்கை..! எனக்கே என்னை அறிமுகம் செய்த ஆசிரியை..! அவளுக்கு என்ன அறிமுகம்… 

வாழ்வு சுகமானது

முகமறியா மழலையின்  முத்தம் சுகமானது…! முகவரி அறியாதவனின் உதவி சுகமானது…! மலை பாதை பயணத்தின் மழை சுகமானது…! பேருந்துக்கு சில்லறை போதவில்லையென்றாலும் பேதையாய் பேசிக்கொண்டே வீடுதிரும்பியபோது வறுமை சுகமானது ….! ஊடலின்றி ஒரே படுக்கையில் பலர கூடியுரங்கியபோது நட்பு சுகமானது…! நண்பனின் தங்கை தன்னையும் அண்ணா என்றழைப்பதும் சுகமானது…!… 

தவறு குற்றம் அல்ல..!

பலமுறை படித்துவிட்டு, படித்ததில் இருந்து கேள்விகேட்கும் தேர்வில் கூட நூற்றுக்கு நூறு  வாங்குவது சிரமம்..! முதல் முறை வாழும் வாழ்கை இது…! தவறு குற்றம் அல்ல..! தோல்வி வீழ்ச்சி அல்ல..! புன்னகையோடு ஏற்றுக்கொள் புரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் காலம் வரும்…!

தெருவுக்கு வந்த காமராஜர்..!

தெருவுக்கு வந்த காமராஜர்..! ஏழைகளின் தெய்வமாக வாழ்ந்த இந்த மா.மனிதனை பாடப்புத்தகத்தில் பாடமாக வைத்து இருந்தால் பரவாயில்லை இப்படி வியாபாரத்துக்கு பயன்படுத்தி அசிங்க படுத்துகிறார்களே இவரைகளை யார் கேள்வி கேட்பது..? யாருடைய அனுமதி பெற்று தனியார் விளம்பரத்தில் காமாராஜர் படத்தை வைத்தார்கள்..? வியாபாரத்துக்கு நடித்த நடிகரா அவர் ?… 

இரவின் மடியில்..!

பூச்சிகள் இசை இசைக்க, தெரு நாய்கள் அலற, மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க… கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க நடுக்கத்துடன் தொடங்கியது என் நள்ளிரவு..! இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான்… 

புரட்சி…! புரட்சி…! புரட்சி…!

காதலிக்கு செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்…! செலவு செய்வதர்க்கொரு காதலி இல்லையென்றொரு கூட்டம்…! மதுவருந்த செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்…! யார்செலவில் மதுவருந்துவதென்றொரு கூட்டம் …! கைபேசி வாங்குவதர்கென்றொரு கூட்டம்…! கைபெசியே இல்லையென்றொரு கூட்டம் …! திரைப்படம் பார்ப்பதர்க்கென்றொரு கூட்டம்…! திரைப்பட சுவர்ப்பலகையை பார்தபடியொரு கூட்டம்…! கோவில் கருவறைக்குள்ளொரு கூட்டம் ….!… 

யார் “இவர்”?.

யார் “இவர்”?. இந்த உலகம் இவரை மறந்திட்டதோ? உலக சிறந்தவர்களில் இவரும் ஒருவர்….! ஏனோ …! அந்த பட்டியலில் இவர் பெயர் இன்னும் இடம் பெறவில்லை..! அன்புள்ளம் கொண்டவர் அடக்கமாய் இருப்பவர்…! இயல்பாய் இருப்பதே இவர் சிறப்பு…! சராசரி மனிதைப்போல் அல்ல சராசரி மனிதனாகவே வாழ்பவர்…! இதுவரை இந்த… 

மௌனம்..!

வாயடைத்து வார்த்தையின்றிப் போவது மௌனம் அல்ல..! தனக்குள் பேசிக்கொள்வதும் பிறரை பேசாமல் கொல்வதும் தான் மௌனம்…!