காதல் செய்தேன்.
கற்புள்ள கன்னியரை
மட்டும் அல்ல…
மட்டும் அல்ல…
மெரினா கடற்கரையில்
நடப்பது போல் சாலையில்
என்னை கடந்து செல்லும்
கிழவியை – காதல் செய்தேன்.
நடப்பது போல் சாலையில்
என்னை கடந்து செல்லும்
கிழவியை – காதல் செய்தேன்.
வேகமாய் என்னை கடந்து
சட்டென்று வாகனத்தை நிறுத்தி
நாய்குட்டிக்கு வழிவிட்ட
நண்பரை -காதல் செய்தேன்.
என் முகம் அறியாமல்
புன்னகை செய்யும் மழலையின்
இதழ்களை -காதல் செய்தேன்.
வேகத்தடையில் ஏறி இறங்கும்
ஒரு நொடியில் என்னை
முந்திச்சென்ற மிதிவண்டி
சிறுவனை -காதல் செய்தேன்…
ஒரு நொடியில் என்னை
முந்திச்சென்ற மிதிவண்டி
சிறுவனை -காதல் செய்தேன்…
நிறுத்தம் வந்ததும்
இருக்கையில் அமர்ந்திருந்த
முதியவர் இறங்கும்முன்..
நீ உக்காருப்ப !!! என்றார்
அவரையும் -காதல் செய்தேன்.
இருக்கையில் அமர்ந்திருந்த
முதியவர் இறங்கும்முன்..
நீ உக்காருப்ப !!! என்றார்
அவரையும் -காதல் செய்தேன்.
நான் வாங்கிகொடுத்த
பனிக்குழைவை சாப்பிடத்தெரியாமல்
என் மேல்சட்டையில் கொட்டிய
என்மகளை – காதல் செய்தேன்.
பனிக்குழைவை சாப்பிடத்தெரியாமல்
என் மேல்சட்டையில் கொட்டிய
என்மகளை – காதல் செய்தேன்.
அருகில்!!
அவள் வாயை பார்த்துகொண்டிருந்த
அவள் வயதுடைய வேறொருவர்
மகளையும் – காதல் செய்தேன்.
வேறொரு பனிக்குழைவை
கையில் கொடுத்து….
கையில் கொடுத்து….
காதல் செய்
எல்லாவற்றையும்
காதல் செய்….
காதல் செய்….
சுவாசிக்க மறந்து
சுடுகாடு செல்லும் வரை
காதல் செய்..!!!
சுடுகாடு செல்லும் வரை
காதல் செய்..!!!
சுடுகாட்டிற்கு பின்
சொர்க்கம் வருமா
என்று தெரியாது…
கா-த-ல் செ-ய்
நீ சாகும் முன்னரே
சொர்கம் காணலாம்…
காதலுடன்,
பாமரன் பா.பரத்
